Saturday, January 18, 2014

நிமிர்ந்து நில் - 3

பாரதிய கட்டடக்கலை :

பாரத கலாச்சாரத்தில் இன்றும் மாறாமல் இருப்பவை நம் பண்டைய கால கோவில்கள் மற்றும் கட்டடங்கள்.

உலகின் பல்வேறு பாகங்களில் சிறப்பு வாய்ந்த கட்டடங்கள் தோன்றியுள்ளன, தோன்றிய அதே வேகத்தில் என்ன காரணத்திற்காக அவை தோன்றின என்ற குறிப்புகளும் கூட இல்லாமல் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன.

மாயன் பிரமிடுகள், இன்கா கட்டட அமைப்புகள், stone henge கட்டட அமைவு போன்றவை இதற்கான உதாரணங்களாக கூறலாம்.  அவை ஏன்-எதற்காக-யாரால் கட்டப்பட்டன போன்ற எந்த கேள்விகளுக்கும் தர்க்க ரீதியான பதில்கள் இல்லை. வெறும் யூகங்கள் மட்டுமே தலையை சுற்றி மிஞ்சி நிற்கும்.

இப்பதிவில் நம் பண்டைய கால கட்டட சிறப்புகளில் மிக மிக சிலவற்றை மட்டும் காணப்போகிறோம்.

நம் வசதிக்காக இரண்டு பிரிவாக பிரிக்கலாம். (இதற்கும் இன்றைய அறிவியல் ரீதியான பகுப்பிற்கும் சம்பந்தம் இல்லை)

 • கோவில்கள்
 • சமூக கட்டட அமைப்புகள்

1. கோவில்கள் :

நமக்குக் கோவில்கள் பற்றிய அறிமுகம் தேவை இல்லை, ஆனால் அவற்றின் கட்டடக் கலை நுணுக்கம் பற்றிய அறிவு தேவைப்படுகிறது.

எத்தனை வகை :

 • குப்தர் கால கோவில்கள் 
 • வாதாபி சாளுக்கிய வடிவம்
 • பல்லவர் கால கோவில் மற்றும் சிற்பக் கலை 
 • சோழர் கால கோவில் மற்றும் சிற்பக் கலை 
 • கஜுராஹோ கோவில் வடிவம்
 • ஹோய்சளர் பாணி 
 • விஜயநகர கோவில் பாணி 
 • நாயக்கர் கால கோவில்கள் 
இப்படி பல்வேறு கோவில் கட்டுமான வகைகள் அந்தந்த காலத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன.

நமக்கு மிகவும் அறிமுகமான தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், தில்லை நடராஜர் கோவில், அவற்றின் சிறப்புகள் சில.

1. பெருவுடையார் கோவில் 1003 ல் ஆரம்பித்து 1010 ல் முடிவுற்றது : தோராயமாக 60 மீ உள்ள கோபுரம், 35 உட்கொவில்கள், இரண்டவது கோபுரம் என்று இத்தனை கட்டட வடிவங்களும் செய்து முடிக்க 7 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. இன்று ஒரு பாலம் கட்ட நமக்கு இதைவிட அதிகமான காலம் தேவைப்படுவதை காணும்போது நம்முடைய தொழில்நுட்பம் மலைக்க வைக்கிறது.


தஞ்சை பெரிய கோவில்
2. எங்கேயிருந்தது கல்? : காவேரி பூமி ஒரு சம தள பூமி என்று தெரியும், அதை சுற்றி அருகில் மலை எதுவும் கிடையாது. பின் எங்கேயிருந்து கிடைத்தது இவ்வளவு பெரிய கோவில் கட்டுவதற்கு கல்? திருச்சிக்கு 60 கி.மீ தொலைவுலுள்ள நார்த்தாமலையிலிருந்து கொண்டு வந்தார்கள். 

3. ஒரே சிற்பம் இரண்டு பாவங்கள் : மோனலிசா ஓவியத்தை சிலாகித்து பல்வேறு ஓவியர்கள் கூறியிருகின்றனர், அதேவேளையில் இங்கே தில்லை நடராஜர்  கோவிலில் கஜசம்ஹார மூர்த்தி சிற்பம் உள்ளது. பார்க்க இங்கே சொடுக்குங்கள்.


4. நடராஜர் கோவில் : இது புவியின் காந்த மையக்கோட்டின் மையத்தில் அமைந்திருக்கிறது. எந்த விதமான புவியியல் அறிவுக் கூர்மை இருந்திருந்தால் இதை செய்திருக்க முடியும்?சிதம்பரம் நடராஜர் கோவில்
5. பொற்கூரையின்  சிறப்பு : பொன்னம்பலத்தில் உள்ள கூரையில் 21,600 பொன் ஓடுகள் உள்ளன, அவை தினமும் விடும் மூச்சின் எண்ணிக்கையை குறிக்கின்றன. 72,000 தங்க ஆணிகளால் இணைக்கப்பட்டுள்ளது, நம் உடலின் மொத்த நாடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.

பொற்கூரை
6. நேர்க்கோட்டில் நிற்கும் ஸ்தலங்கள் : சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் கோவில் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன. இது தற்செயல் அல்ல. இம்மூன்று திருக்கோவில்களும் 79° 40' கிழக்கு அட்ச ரேகையில் அமைந்திருக்கின்றன. இது நமது முன்னோர்கள் பொறியியல், வானியல் தொழில்நுட்பத்தில் சிறந்திருந்ததற்க்கான உதாரணம்.7. ஆயிரம் கால் மண்டபம் : ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பு, அந்த எல்லா தூண்களும்  அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அச்சு பிசகாமல் நிற்கின்றன. இது சாதாரண விஷயம் அல்ல.


உலக அதிசயமாக சரியாக கட்டப்படாத ஒரு சாய்ந்த கட்டடத்தை போற்றும் இந்த உலகிற்கு இது சாதாரணமாகத் தான் தோன்றும் போல.ஸ்ரீ ரங்கம் ஆயிரங்கால் மண்டபம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம்

2. சமூகக் கட்டட அமைப்புகள்:


 1. மாமல்லபுரம் சிற்பங்கள்
 2. கொனார்க் சூரியக் கோவில்
 3. பௌத்த தலங்கள்
 4. மொகஞ்சதாரோ பெரு குளியல் தொட்டி
 5. அரண்மனைகள்
 6. குதூப் மினார்
 7. தாஜ் மஹால்
போன்றவைகளை இதில் வகைப்படுத்தலாம்.

மேலும் இது பொன்ற எண்ணற்ற பல கட்டடக் கலை பொக்கிஷங்கள் நம் நாட்டின் எல்லா மூலைகளிலும் உள்ளன. இவற்றின் சிறப்பை நாம் அறியாமல் இருக்கிறோம். சரி அறியாமல் விட்டதோடல்லாமல் அவற்றின் அழகை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கோவில் மதில் சுவரில் போய் நமது பரீட்சை எண்ணை எழுதி வைப்பது, கோட்டைகளுக்கு சென்று வந்தால் அங்கே நமது பெயரை பதிவு செய்வது, மாநகர பேருந்துகளில் எழுதும் வழமை நமக்கு எல்லா இடத்திலும் எழுதும் சுதந்திரத்தை கொடுத்துவிடுகிறது. 

போற்றி பாதுகாக்க வேண்டிய பல கலை வடிவங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறோம். மேல் நாட்டவர்கள் தங்கள் கலை வடிவங்கள் 100 வருட பழமையானது தான் என்றாலும் சிறப்பாக பாதுகாக்கின்றனர். ஆனால் நாமோ ஆயிரமாயிரம் ஆண்டு பழமையான கலை வடிவங்களை பாதுகாக்கவில்லையென்றாலும் குறைந்தபட்சம் சிதைக்காமல் இருப்பது நலம்.

பாரதீய கட்டடக் கலையில் இங்கு நான் கொடுத்திருப்பது ஒரு சிறு துளி தான். அதுவும் நாம் இங்கு பார்க்கும் தென் பாரதக் கட்டக்கலைகளை மட்டுமே. இவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

கொத்துமல்லி:
உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவில் இருப்பது கம்போடியாவில், சோழர்கால கட்டடக் கலை மற்றும் க்மேர் கட்டட கலையின் இணைவாக இந்த கோவில் இருக்கிறது. கடல் கடந்தும் வாழ்கிறது நமது கலை.


முந்தைய பதிவுகள்:

நிமிர்ந்து நில் - 1 
நிமிர்ந்து நில் - 2

No comments:

Post a Comment